நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவிகள் மரணம் : காயல் அப்பாஸ் இரங்கல் !

தமிழகம் ஜூன் 6

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .

மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடபட்டுள்ளது .இத் தேர்வில் வெற்றி காணமுடியாமல் தோல்வியடைந்த திருப்பூரை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தூக்கிலிட்டும். பட்டு கோட்டை சேர்ந்த மாணவி லைஷியா தீக்குளித்தும் இருவரும் உயிரைமாயித்து கொண்ட செய்தி அதிர்ச்சியையும் வேதணை அளிக்கிறது.

மருத்துவ கல்வி பாரபட்சமின்றி அணைத்து தரப்பு மாணவ மாணவிகளுக்கும் கிடைக்க நீட் தேர்விலிருந்து தமிநாட்டுக்கு விலக்கு பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.

நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாத மாணவ மாணவிகள் தற் கொலை செய்யும் எண்ணத்தை தவிர்த்து. மனம் தளராமல் எதையும் எதிர் கொள்ளும் துணிவுடன் வாழ்க்கையின் நல்ல எதிர் காலத்தை அமைத்து கொள்ள வேண்டும் மென கேட்டு கொள்கிறேன் .

உயிரிழந்த மாணவி ரிதுஸ்ரீ லைஷ்யா குடும்பத்தினருக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

எனவே : நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கினை பெற்று தர வேண்டும் மெனவும் உயிரிழந்த மாணவிகள் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பிடு தொகை 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள் கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

275 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close