நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்குகோரி கோவையில் அனைத்து கட்சியினா் ஆர்ப்பாட்டம்!

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்குகோரி கோவையில் அனைத்து கட்சியினா் ஆர்ப்பாட்டம்.

கோவை.

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரியும், தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு குறித்து நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும் இன்று ( 5.02.2018 காலை கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் பங்கேற்பு.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத்தின் கோவை மண்டல செயலாளர் ம.சந்திரசேகர் தலைமை தாங்கினார். இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பி.மௌனசாமி, கே.எம்.செல்வராஜ், ஏ.அசரப் அலி, எஸ்.சண்முகம், பி.முருகன், ஆர்.சுதர்சன், எம்.நிர்மலா, முன்னாள் மான்ற உறுப்பினர் ஆர்.தேவராஜ், மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் சி.சிவசாமி, மத்திய மண்டலக்குழு செயலாளர் ஆர்.தேவேந்திரன், தெற்கு மண்டலக்குழு செயலாளர் ஏ.சுப்பரமணியம், காரமடை கிழக்கு செயலாளர் ஆர்.துரைசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் சு.பழனிசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சி.சுப்பையன், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. யின் மாநில துணைத்தலைவர் என்.செல்வராஜ், சி.எல்.யு. பொதுசெயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன், ஜே.கலா, அமிர்தம் சற்குணம், என்.கணேசன் உள்ளிட்டோரும்.

திமுக வின் கோவை தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி, இந்திய தேசிய காங்கிரசின் கோவை மாநகர மாவட்ட தலைவர் முயூரா ஜெயக்குமார், கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன், மதிமுக மாநகர செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், ஈஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல அமைப்பாளர் சு.சி.கலையரசன், எஸ்.டி.பி.ஐ.சையது இப்ராகிம், ஆதிதமிழர் பேரவை நாகராஜ் மற்றும் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் தி.க. செந்தில்நாதன், மாவட்ட தலைவர் சிற்றசு, மாணவர் அணி மாநில துணை செயலாளர் ஆ.பிரபாகரன், பழ.அன்பரசு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

1,968 total views, 4 views today

Top

Registration

Forgotten Password?

Close