நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் இரவுஆற்று மணல் அள்ள வந்த லாரியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் இரவுஆற்று மணல் அள்ள வந்த லாரியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

February 12, 2018 0 By Suresh Media7

திண்டுக்கல் மாவட்டம்நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் இரவுஆற்று மணல் அள்ள வந்த லாரியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். காலையில் மணல் லாரியை போலீசார் விட்டு விட்டதால் பொதுமக்கள் தாசில்தார் அலுவலகம் முன்பு கோஷம் போட்டுஆர்ப்பாட்டம் செய்தனர்
நிலக்கோட்டை அருகே உள்ளது அணைப்பட்டி இங்கு ஓடும் வைகையாற்றிவிருந்து திண்டுக்கல்,திருப்பரங் குன்றம், வத்தலக்குண்டு உள்பட 50 நகரங்கள் 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான குடிநீர் ஆதார ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. இங்கு கடந்த இரண்டு மாதமாக இரவில் 200க்கும் மேற்பட்ட லாரிகள் மணல் திருடி வந்தன. அதைத் தொடர்ந்து அந்த ஊர் மக்கள் இரவு பகலாக காவல் காத்து வந்தனர்.இந்நிலையில் நேற்று இரவு இரண்டு மணிக்கு ஒரு லாரி மணல் திருடி சென்ற போது பொதுமக்கள் மடக்கினர். அதில்   ஆத்திரமடைந்த மணல் திருடர்கள் பொதுமக்களை தாக்கினர் ஏற்றிய மணலை தொட்ட முயன்றனர். அதை மக்கள் தடுத்தபோது மணலை மக்கள் மீது விழச்செய்தனர். மக்கள் கூட்டம் அதிகமானதை தொடர்ந்து மணல் திருடர்கள் அடங்கி போனார்கள் பின்னர் மணல் லாரியை நிலக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். காலையில் போலீசார் மணல் லாரியை விட்டுவிட்டதை அறிந்த அணைப்பட்டிகிராம மக்கள் 20 பெண்கள் உள்பட 50 பேர் திரண்டு வந்துநிலக்கோட்டை தாசில்தார் அலுவலகம் வந்து அலுவலகம் முன்பாகே கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனால் பரபரபப்பு ஏற்பட்டது.பின்னர் தாசில்தார் நிர்மலா கிரேசிடம் மனு கொடுத்து விட்டு கலைநதனர்,

பேட்டி ஒன்று நாக ராஜ் பேட்டி இரண்டு பாமா பேட்டி மூன்று தேவி பேட்டி 3

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ராஜா

1,329 total views, 2 views today