பெண் உறவினர்கள் சாலை மறியல் கணவன் மீது வரதட்சணை கொடுமை செய்து கொன்று விட்டதாக குற்றச்சாட்டு கணவன் உறவினரான தங்க தமிழ்ச்செல்வன் நேரில் வந்து குற்றத்தை மறைத்து விட்டதாக பேட்டி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை இ.பி காலனியைச் சேர்ந்தவர் விவேக்பாண்டி இவருக்கும் உசிலம்பட்டியைச் சேர்ந்த சபிதாவுக்கும் இரண்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்து ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையே வரதட்சணை கேட்டு விவேக்பாண்டி துன்புறுத்தியதாக தெரிகிறது. நேற்று மாலை சபிதா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். நேற்று இரவு தினகரன் அணி கொள்கைபரப்புசெயலாளர் தங்கதமிழ்செல்வன் நிலக்கோட்டை வந்து சபிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். தங்க தமிழ்ச்செல்வன் மச்சினர் மகன் விவேக்பாண்டி இந்நிலையில் இன்று சபிதா உறவினர்கள் விவேக்பாண்டி சபிதாவை கொலை செய்து தூக்கில் மாட்டியதாக கூறி சாலை மறியல் செய்தனர்.நிலக்கோட்டை டி.எஸ்.பி சமரசம் செய்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர் தங்க தமிழ்ச்செல்வன் தனது செல்வாக்கை பயன்படுத்தி விவேக் பாண்டியின் குற்றத்தை மறைப்பதாக பேட்டியில் கூறினர். திண்டுக்கல் ஆர்.டி.ஓ, நிலக்கோட்டை தாசில்தார் நிர்மலாகிரேஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷாட்விவரம் சாலை மறியல் செய்யும் காட்சிகள் பெண் அப்பா மகாராஜன், அம்மா லட்சுமி பேட்டி

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ராஜா

 493 total views,  2 views today