நவீன காவல் நிலையம் ஆக்கும் முயற்சியில் பேர்ணாம்பட்டு காவல்துறை ஆய்வாளர் அப்பாசாமி. !

0
0

நவீன காவல் நிலையம் ஆக்கும் முயற்சியில் பேர்ணாம்பட்டு காவல்துறை ஆய்வாளர் அப்பாசாமி.

இந்திய அளவில் தலைசிறந்த காவல் நிலையம் என்ற பெருமையை சில மாதங்களுக்கு முன்னர் கோவை மாவட்டத்தில் உள்ள ஆர். எஸ். புரம் காவல் நிலையம் டெல்லியில் குடியரசு தலைவரிடம் அந்த காவல் நிலைய ஆய்வாளர் பெற்றார்.

தற்போது பேர்ணாம்பட்டு காவல் நிலையம் போதிய வசதிகள் இல்லாத நிலையில் உள்ளது.
இந்த காவல் நிலையத்தை
” நவீன காவல் நிலையமாக ” ஆகும் முயற்சியில் இறங்கி உள்ளார்.
அதன் முதற்கட்டமாக காவல் நிலைய குடியிருப்பு பகுதியில் மண்டியிட்டு இருந்த புதர்களை ஜேசிபி இயந்திரம் மூலம் சீர்படுத்தி மூலிகை மரங்கள் நடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
by
காவல் நிலையத்தில் உள்புறம் சீர்படுத்தி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் நபர்களுக்கு அமரும் அறைகள்.

காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் பதிவாகி திறந்த வெளியில் உள்ள இருசக்கர வாகனங்களை முறைப்படுத்தி வைப்பதற்காக கலர் கூலீங் சீட் செட்.

காவல்கள் பயன்படுத்த நவீன கழிவறைகள்.

காவல் நிலையத்தின் சுற்றுச்சூழலை மேம்படுத்த வெளிப்புறம், உள்புறம் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதியின் வெளிப்புறம் பசுமை தோட்டம் அமைத்தல்.

காவல் நிலையத்தின் சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரிக்க கம்பி வேலிகள் அமைத்தல்.

காவல் நிலையம் புது பொலிவு பெற வண்ணம் அடித்தல்.

காவல்கள் உணவு இடைவேளையில் உணவு உட்கொள்ளும் அறை.

போன்ற வசதிகளை காவல் நிலையத்தில் மேற்கொள்ள தொண்டு நிறுவனங்கள் மூலம் செய்து கொடுக்க வேண்டுமாய் காவல் ஆய்வாளர் திரு. அப்பாசாமி முயன்று வருகிறார். அதன் முதற்கட்டமாக பேர்ணாம்பட்டு ரோட்டரி சட்டத்தையும்,
நம்ம பேர்ணாம்பட்டு அமைப்பின் பொறுப்பாளர்களையும் அழைத்து மேற்காணூம் பணிகள் செய்து கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்.

ரோட்டரி சங்கம் சார்பில் அதன் தலைவர் திரு. அதீகுர் ரஹ்மான் அவர்களும் முன்னாள் தலைவர் திரு. இக்பால் அகமத் அவர்களும்,

நம்ம பேர்ணாம்பட்டு அமைப்பின் சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள்
திரு. பொன்.வள்ளுவன் ,
திரு. ஜுனேத் அகமத் ,
திரு. ஆரிப் அகமத்,
திரு. த.முத்தரசன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரோட்டரி சங்கம் சார்பில் அதன் மாவட்ட ஆளுநர் அவர்களிடமும்
நம்ம பேர்ணாம்பட்டு அமைப்பினர் தங்கள் அமைப்பின் கூட்டம் நடத்தி காவல் நிலையம் குறித்து பேசி பின்னர் செய்து கொடுப்பதாக ஆய்வாளரிடம் அறிவித்தனர்.

காவல் துறை ஆய்வாளர் திரு. அப்பாசாமி அவர்களின் நல்ல முயற்சிக்கு ரோட்டரி சங்கமும்
நம்ம பேர்ணாம்பட்டு அமைப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

வேலூர் செயதியாளர்
உமாசங்கர்

1,268 total views, 3 views today