நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற 10ஆம் வகுப்பு மாணவன் நீரில் முழ்கி உயிரிழப்பு.

வேலூர்மாவட்டம், குடியாத்தம் அடுத்த மத்தூர் கிராமத்தில் வசித்து வரும் விவசாயி பன்னீர்செல்வம் இவரது மகன் ரூபேஷ் மத்தூர் அடுத்தபரதராமி பகுதியில் உள்ள அரசுபள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றான்.  காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை என்பதால் தன் நண்பர்களுடன் வீட்டின் அருகில் உள்ள நரசிம்மன் என்பருக்கு சோந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றான் அப்பொது கிணற்றுல் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த நண்பர்கள் கூச்சலிட்டனர் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மாணவனை காப்பற்ற முயன்றனர் ஆனால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தனர் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி மாணவனை சடலமாக மீட்டனர் பிரேதபரிசோதனைக்கு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இது குறித்து பரதராமி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.     வேலூர் மாவட்டம்- குடியாத்தம் செய்தியாளர் கே.உமாசங்கர்

 491 total views