தொண்டியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா

தொண்டி : உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நேற்று தொண்டி பெண்கள் அரசு மேல் நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியை ஜோஸ்மின்மேரி தலைமை வகித்தார். கிழக்கு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆசிரியர் பயிற்றுனர் உஷா, பிரகாஷ் கண்ணன், மலர் விழி பேசினர். சிறப்பு ஆசிரியர்கள் அலெக்ஸ், அருள்ராஜ், அலெக்ஸ்பாண்டியன், கிருஷ்ணகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் பள்ளி ஆசிரியர்கள் சரண்யா, தங்கம்மாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். முன்னதாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.

575 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close