தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்குதெருவில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றன .உலக நாடுகளை உலுக்கி எடுக்கும் கொரோன வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பொதுமக்களை வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்திவருகிறது .இதனால் தமிழக அரசு அனைத்து ரேஷன் பயனாளிகளுக்கும் 1000 ரூபாய் பணம் மற்றும் இலவச அரிசி பருப்பு சீனி சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறது .இந்த வேளையில் பொதுமக்களுக்கு கிடைக்க கூடிய பொருள்களின் எடையில் இவர்கள் பல்வேறு முறைகேடுகள் நடத்தி வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றன .அது மட்டுமின்றி அரசு ஊழியர்கள் தவிர உள்ளூர் நபர்கள் மூன்று நான்கு பேர் எப்போதும் ரேஷன் கடையினுள் பொருட்கள் வழங்கும் நேரத்தில் இருப்பதாகவும் அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு அவர்கள் முதலில் எதுவாக இருந்தாலும் வழங்கப்படுகிறார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன .எனவே இது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதி ரேஷன் கடையில் பணிபுரியும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன .

177 total views, 3 views today