தேமுதிக அமீரகபிரிவு சார்பாக துபாயில் தமிழர் திருநாளாம் சமத்துவ பொங்கல் விழா

துபாய்:தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா! என்ற கொள்கையுள்ள தேமுதிகவின் நிறுவனத்தலைவர் மற்றும் கழக பொதுச்செயலாளர்
கேப்டன்- விஜயகாந்த்
தேமுதிக அமீரகபிரிவு சார்பாக துபாயில் தமிழர் திருநாளாம் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடபட்டது.

துபாயில் உள்ள சிவன் கோவில் அருகில் செயலாளர் மதுரை S.காரல்மார்க்ஸ் தலைமையில் மிகபிரமாண்டமாக முறையில் நடைப்பெற்ற இந்த விழாவில் அவைத்தலைவர் ரஹமத்துல்லா,பொருளாலர் சதீஸ் குமார்.துணைச்செயலாளர்ள் மாரிமுத்து,அமஜத்அலி,சகிலன்,நெல்லை தவசிமுருகன்,முன்னிலையில் நடந்த விழாவில் கேப்டன் அவர்கள் நீடூழி வாழ சிறப்பு வழிபாடு நடத்தி தமிழ் சொந்தங்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

இதில் தேமுதிக தொண்டர்கள் மற்றும் நண்பர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.

உலகத்தமிழர் அனைவருக்கும் தேமுதிக அமீரக (துபாய்)பிரிவு சார்பாக இனிய பொங்கல் வாழ்த்தினை தெரிவித்தனர்.

துபாய் செய்தியாளர்
ஜ. முகம்மது அஸ்கர் அலி

Top

Registration

Forgotten Password?

Close