தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக   துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பட்டம்.

தேனி மாவட்டம் ஊராட்சிகளில் பணிபுரியும் 0 HTஆபரேட்டர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம். பென்ஷன் .பணிக்கொடை ஆகியவைகளை வழங்கிட அரசாணை வெளியிட வேண்டும்…. அந்த அரசாணைப்படி அனைத்து துப்புரவு பணியாளர் களுக்கும் பென்ஷன். மற்றும் பணிக்கொடை வழங்கிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்…. தூய்மை காவலர்கள் பணியாளர்களுக்கு SR புத்தகம் பதிவுசெய்து சம்பளம் வழங்கிட வேண்டும்…… ஒரே வேலைக்கு இரண்டு விதமான சம்பளம் வழங்குவதை கைவிட்டு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்… அரசாணை எண் 62 ஐ அமலாக்கி சம்பள உயர்வுகளையும் வழங்கிட வேண்டும் என்பன போன்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டம் மாவட்டத் துணைத் தலைவர் எம். குருசாமி அவர்கள் தலைமையிலும். மதுரைமுத்து பாண்டிஈஸ்வரன். எஸ் .பழனிச்சாமி கிருஷ்ணசாமி.ஹரிகிருஷ்ணன் இவர்களின் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் எம். ராமச்சந்திரன். சிஐடியு மாவட்ட பொருளாளர். ஜி. சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்

613 total views, 3 views today