தேனி மாவட்டம் போடியில் பயங்கர ஆயுதங்களுடன் கூலிப்படையினர் 9 பேர் கைது…

தேனி அருகே உள்ள போடி வெங்கடாசலபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் முகநூல் மூலமாக மலேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை திருமணம் செய்வதற்காக மலேசியாவில் இருந்து வெங்கடாசலபுரத்துக்குவந்த பெண்ணை. வாலிபரின் குடும்பத்தார்கள் கடுமையாக பேசி விரட்டி விட்டுள்ளதாக தெரிகிறது இதனைஅடுத்து மனமுடைந்த அந்தப்பெண் மலேசியாவிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார்…

தற்கொலை செய்து கொண்ட மலேசியப் பெண்ணின் சகோதரி. தனது உடன் பிறந்த சகோதரியின் தற்கொலைக்கு காரணமான வாலிபரை கொள்வதற்காக தேனி மாவட்டத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட கூலிப்படையினரை ஏற்பாடு செய்துள்ளார். அந்தவாலிபரை கொலை செய்வதற்காக மலேசியப் பெண் ஏற்பாடு செய்த கூலிப்படையினர் போடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருக்கும் பொழுது இன்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போடி நகர போலீசார் அவர்களை சுற்றி வளைத்து ப்பிடித்துகைது செய்தனர். அவர்கள் பயன்படுத்தியகாருடன் கைது செய்யப்பட்ட கூலிப்படையிரை தற்போது போடி காவல் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர். .

205 total views, 3 views today