தமிழகத்தில் தற்போது வேகமாக பரவி வரும் குரானோவைரஸ் பரவளை தடுக்கும் விதமாக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஓபி ரவீந்திரநாத்குமார்  ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நோய்த்தடுப்பு உபகரணங்களை வாங்குவதற்கு நிதிஒதுக்கீடு செய்தார் அதன்படி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெண்டிலட்டர் செயற்கை சுவாச கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் வழங்கப்பட்ட உபகரணங்களை பயன்படுத்த உள்ளார்கள் இந்நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக வரும் நபர்கள் நோய்த் தொற்று ஏற்படாதவாறு கிருமிநாசினி தெளிக்கும் தானியங்கி இயந்திரம் அடங்கிய சுரங்கப் பாதையை தற்பொழுது அமைத்து வருகிறார்கள் இதன் மூலம் தேனி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பார்க்க வரும் அண்டை மாவட்டம் உட்பட அனைத்து பகுதி மக்களும் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கப்பாதையில் உள்ளாக செல்லவே அனுமதிக்கப்படுவார்கள். இந்த கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைக்கப்படுவதால் நோய்த்தொற்று ஏற்படுவதை வெகுவாக தடுப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும் இதனால் பொதுமக்கள் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ .பி ரவீந்திரநாத் குமார் அவர்களை பெரிதும் பாராட்டி வருகிறார்கள்

129 total views, 3 views today