தேனியில் ரஜினி உருவ பொம்மை எரித்து போராட்டம் ……

தேனியில் ரஜினி திரைப்படம் ஓடும் திரையரங்கம் முன்பு ரஜினியின் உருவ பொம்மை எரித்து ஆதித்தமிழர் பேரவை கட்சியினர் திடீர்போராட்டம் நடத்தினரர்கள். இந்த போராட்டத்தில்50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தந்தை பெரியாரை பற்றி துக்ளக் விழாவில் அவதூறு கருத்துக்களை கூறியநடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திராவிடர் கழக நிர்வாகிகள் அறிக்கையாகயாக வெளியிட்டு இருந்தனர் அதனைத் தொடர்ந்து நேற்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறியதை கண்டித்து தேனி பூதிப்புரம் ரோட்டில் அமைந்துள்ள ரஜினி திரைப்படம் ஓடும் தனியார் திரையரங்கம் முன்பு ஆதி தமிழர் பேரவை கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் ரஜினியின் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தின்போது போலீசார் தடுத்து நிறுத்தில் போலீசாருக்கும் உருவபொம்மை எறிக்க வந்த தொண்டர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போராட்டக்காரர்கள் கூறும்போது நடிகர் ரஜினிகாந்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்..

153 total views, 6 views today