தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பூக்காரத் தெருவைச் சேர்ந்தவர்பரமசிவம் இவரதுமகன் மதுரை வீரன் (வயது 34) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியைக் கடந்த 2018 ,ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதனையறிந்த பெற்றோர்கள் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.புகாரைப் பெற்றுக் கொண்ட ஆண்டிபட்டி காவல்துறையினர் மதுரை வீரன் என்பவரைக் கைது செய்து விசாரணை செய்து போக்சோ சட்டம் உட்பட (366,6F பிரிவு)சட்டத்தின் கீழ் பல் வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதி மன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று நடந்த இறுதிக்கட்ட விசாரணையில் குற்றம் ஆதாரத்தோடு நிருபிக்கப்பட்டதால் போக்சோ சட்டப் பிரிவில்20 ,ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மேலும், ஒரு பிரிவில் 10 ,ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மேலும், அபராதம் ரூபாய் 20 ஆயிரம் அபராதமும் கட்டத் தவறினால் மேலும், 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இத்தண்டனையைக் குற்றவாளி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப வறுமை நிலையைக் கருத்தில் கொண்டு சிறுமிக்கு இழப்பீடாக தமிழக அரசு ரூபாய் 7, இலட்சம் வழங்கிடவும் பரிந்துரை வழங்கி தேனி மாவட்ட மகளிர் நீதி மன்ற நீதிபதி கீதா உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து குற்றவாளி மதுரை வீரன் என்பவரை தேனி மாவட்ட மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

279 total views, 3 views today