தேங்காய் தொட்டிகளை மாலையாக கோர்த்தபடி வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாய சங்கத்தினர்.

மதுக்கரை வட்டம் செட்டிபாளையம் பேரூராட்சி பகுதி ஓராட்டு குப்பை பகுதிகளில் இயங்கி வரும் தேங்காய் தொட்டிகள் எரித்து கரியாக்கும் நிறுவனங்களால் மாசு ஏற்படுவதோடு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் இதன் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி தேங்காய் தொட்டிகளை மாலையாக கோர்த்தபடி வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர்.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி கூறுகையில் ஓராட்டு குப்பை கிராமத்தில் நிலத்தை ஆழமாக தோண்டி தேங்காய் தொட்டிகளை எரித்து கரியாக்கி விற்பனை செய்யும் நிறுவனங்களால் மாசு ஏற்படுவதாகவும் இதனால் அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் இந்நிறுவனங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

458 total views, 3 views today