தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய நாடளுமன்ற உறுப்பினர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ் ஜெகத்ரட்சகன் கொரோனா வைரஸ் நோயால் தற்போது மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு 144 ஊரடங்கு உத்தரவால் வீடுகளிலேயே முடங்கிக் கிடப்பதால் தினசரி அத்தியாவசிய தேவைக்கு சிரமப்படுகிறார்கள் ஆகவே தனது சொந்த செலவில் உதவி செய்யும் நோக்கத்தில் அவர் திருத்தணி நகராட்சியில் பணியாற்றுகின்ற 250 தூய்மை பணியாளர்களுக்கு ரூபாய் 900 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை கடை பொருட்களை இலவசமாக வழங்கினார் தொடர்ந்து திருத்தணி பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி அங்காடிகளை பார்வையிட்டு கிருமிநாசினி அளிக்கப்படுகிறதா..? சமூக இடைவெளியை இங்கே பொதுமக்கள் கொடுக்கிறார்களா என்ற தகவலை கேட்டு அறிந்தார் கபசுர குடிநீர் வழங்கினார் பின் திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சென்று ஆய்வு செய்தார் அப்போது அங்கே உள்ள தலைமை மருத்துவரிடம் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்கித் தருவதற்கு தயாராக உள்ளதாகவும் என்று கேட்கப்பட்ட போது தற்போது அரசு மருத்துவமனை வார்டில் வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக தனி வார்டுகள் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தேவையான 200 போர்வைகள் தன் சொந்த செலவில் டாக்டர் ஜெகத்ரட்சகன் வாங்கி கொடுப்பதாக உறுதி அளித்தார்.இதில்
ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் காந்தி மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்டத் துணைத் செயலாளர் சந்திரன் மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர் வினோத்குமார் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் நவீன்.

168 total views, 3 views today