தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் தீயணைப்பு துறை மற்றும் சுகாதாரத் துறை இணைந்து தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் தீயணைப்பு துறை மற்றும் சுகாதாரத் துறை இணைந்து தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அந்த அசாதாரண சூழ்நிலையை எவ்வாறு சமாளித்து தீயை எப்படி அணைப்பது, தீ விபத்தில் காயமடைந்த மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்தான தீயணைப்பு ஒத்திகை இன்று நடைபெற்றது. இதையொட்டி 4வது மாடியில் செயற்கை முறையில் தீ எரிவது போன்ற காட்சி செயற்க்கையாக உருவாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தீ ஒழிப்பு அலாரம் ஒழிக்கப்பட்டு தீயனைப்புத்துறை மற்றும் 108 அம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்ட்டது.

இதைத்தொடர்ந்து உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமரேசன் தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் அமுதா (தூத்துக்குடி), ராஜ் (தெர்மல்), சந்திரசேகர் (சிப்காட்), 18 கமாண்டோ பயிற்சி பெற்ற தீயனைப்பு வீரர்கள், 5 தீயணைப்பு வண்டிகள், 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு விரைந்தன. தீயணைப்புத் துறையினர் 30 நிமிடங்களில் முழுவதும் தீயை அனைத்து முடித்தனர். இதில் காயமடைந்த 20 நபர்களையும், 2வது மாடியில் இருந்து அதிக காயமடைந்த இருவர்களையும், காப்பாற்றியது போல் ஒத்திகை நடத்தப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு தீ விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றிய தீயனைப்புதுறை மற்றும் மருத்துவமனை ஊழியாகளை கல்லூரி முதல்வர் ராமசுப்பிரமணியன், உறைவிட மருத்துவர் சைலேஸ் ஜெயமணி ஆகியோர் பாராட்டினர்.

தூத்துக்குடி செய்தியாளர் பாசில்

96 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close