துபாய் வன்னியர் சங்கம் சார்பாக ஜெ.குரு நினைவேந்தல் நிகழ்ச்சி.

துபாய்: வன்னியர் சங்கம் மணிலா தலைவர் காடுவெட்டி ஜெ. குரு அவர்கள் மறைவிற்கு அமீரக வாழ் வன்னியர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக நினைவேந்தல் நிகழ்ச்சி துபாய் பர்துபை பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஆர்யாஸில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை சங்கு கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது சிரஞ்சிவி முன்னிலை வகித்தார்.

நிகழ்சசியினை மகேஷ் காமராஜ் வரவேற்க, நிகழ்சசியின் வீரவணக்க உரையினை அழகாபுரம் தங்கத்துரை நிகழ்த்தினர்.

இந்த நினைவேந்தல் நிகழ்சசியில் ஜெ குரு அவர்கள் படத்திற்கு பூக்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் அமீரக தமிழர் பேரவை சார்பில் துபாய் மண்டலம் பொதுச்செயலாளர் அபுதாகிர் மற்றும் செய்தியாளர் அஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் ஐம்பதிற்க்கும் மேலான வன்னியர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்துகொண்டனர்.

505 total views, 51 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close