துபாய் ஈமான் கலாச்சார அமைப்பு சார்பாக 46வது அமீரகத்தின் தேசிய தின விழா

துபாய்: ஈமான் கலாச்சார அமைப்பு சார்பாக 46வது அமீரகத்தின் தேசிய தின விழா சிறப்பாக சபீல் பூங்காவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி AIMAN கலை மற்றும் அறிவியல் கல்லூரி. நிருபர் Dr.M.M. சாகுல் ஹமீது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M. அப்துல் ரகுமான் அவர்களும் மற்றும் ஈமான் அமைப்பின் தலைவர் P.S.M. அபிபுல்லாஹ்கான், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் அவர்கள் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வைத்தனர்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அமீரகத்தில் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து பல வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவருக்கு ஈமான் அமைப்பு சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான அமீரகத்தில் வாழும் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒளிப்பதிவாளர்
O.முகம்மது பாசில் யுடன்
அமீரக மண்டல செய்தியாளர்
J. முகம்மது அஸ்கர் அலி

224 total views, 0 views today