துபாய் அமீரக திமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

துபாய்: அமீரக திமுக சார்பில்
இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள மலபார் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர் தாயகத்தில் இருந்து வருகைதந்து திமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளர்
அசன் முகமது ஜின்னா MA., ML கலந்துகொண்டார்.

இதில் அமீரக திமுகவின் தலைவர் அன்வர் அலி, செயலாளர் பாவை ஹனீபா, இணைச் செயலாளர் சாகுல்ஹமீது மற்றும் அமீரக திமுக ஆலோசகர்கள் பிரின்ஸ் (எ) இளவரசன், ஜாகிர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் துபாய் ஈமான் சங்கம், அமீரக தமிழர் பேரவை மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்துரை நிகழ்த்தினார்.

இதில் நூற்றுக்கும் அதிகமான அமீரக திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்
முகம்மது அஸ்கர் அலி
முகம்மது பாசில்

168 total views, 6 views today

Be the first to comment

Leave a Reply