துபாயில் உலக கின்னஸ் சாதனை முயற்சியில்  தமிழ் கில்லி 106.5 FM.

துபாயில் உலக கின்னஸ் சாதனை முயற்சியில் தமிழ் கில்லி 106.5 FM.

May 11, 2018 0 By குடந்தை யாசீன்

துபாய்: அமீரகத்தில் நடத்தப்படும் கில்லி 106.5 FM தொகுப்பாளர்கள் கின்னஸ் சாதனை முயற்சியில் 106 மணி நேரம் 50 நிமிடங்கள் இடைவிடாமல் தொகுத்து வழங்கி உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சாதனை முயற்சி துபாய் அவுட்லெட்மால் வளாகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தொகுப்பாளர் பிரதீப் மற்றும் நிவி ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கின்றனர்.

இந்த புதிய உலக சாதனை முயற்சி மே 7 ஆம் தேதி காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழர்களின் இந்த முயற்சிக்கு அமீரகத்தில் வாழும் தமிழ்மக்கள் மற்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் நேரில் சென்றும், அலைபேசியில் தொடர்பு கொண்டும் பாராட்டுக்களை தெரிவித்தும் அவர்களை
ஊக்குவித்து வருகின்றனர்.

இதுவரை 100 மணி நேரத்தினை கடந்து தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்த முயற்ச்சியில் ஈடுபட்டுள்ள கில்லி 106.5 FM தொகுப்பாளர்களுக்கு மீடியா 7 நியூஸின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

செய்தியாளர்
முகம்மது அஸ்கர் அலி

60 total views, 3 views today