துபாயில் உலக கின்னஸ் சாதனை படைத்த தமிழ் கில்லி 106.5 FM.

துபாயில் உலக கின்னஸ் சாதனை படைத்த தமிழ் கில்லி 106.5 FM.

May 13, 2018 0 By குடந்தை யாசீன்

துபாய்: அமீரகத்தில் நடத்தப்படும் கில்லி 106.5 FM தொகுப்பாளர்கள் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

106 மணி நேரம் 50 நிமிடங்கள் இடைவிடாமல் தொகுத்து வழங்கி உலக சாதனை படைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர் தொகுப்பாளர் பிரதீப் மற்றும் நிவி ஆகியோர்.

இந்த புதிய உலக சாதனை முயற்சி துபாய் ஆவுட்லெட்மால் வளாகத்தில் மே 7 ஆம் தேதி காலை 8 மணியளவில் தொடங்கி மே 11 மாலை 6.50 மணி வரை நடைப்பெற்றது.

இதற்காக துபாயில் கின்னஸ் சாதனை குழுவின் உறுப்பினர் ஹேதா கின்னஸ் சாதனை சான்றிதழை நூற்றுக் கணக்கான மக்கள் முன்னிலையில் தொகுப்பாளர் பிரதீப் மற்றும் நிவிக்கு வழங்கப்பட்டது.

செய்தியாளர்
முகம்மது அஸ்கர் அலி

207 total views, 6 views today