துடைப்பம் எடுத்து சுத்தம் செய்த கவர்னர்

துடைப்பம் எடுத்து சுத்தம் செய்த கவர்னர்

November 15, 2017 0 By Thamimun ansari

துடைப்பம் எடுத்து சுத்தம் செய்த கவர்னர்

கோவையில் இரண்டாவது நாளாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று ஆய்வு செய்கிறார். ஆய்வில் துடைப்பத்துடன் குப்பைகளை அள்ளி தூய்மை பணியில் ஈடுபட்டார்.

கவர்னர் அதிரடி

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், கோவை மாவட்ட அரசுதுறை அதிகாரிகளுடன், வளர்ச்சிப் பணிகள் குறித்து நேற்று நேரடியாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தனது அதிரடியை துவக்கியுள்ளார்.

துடைப்பத்துடன்

கோவை-காந்திநகர் பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை நேரில் ஆய்வு செய்தார். ‛தூய்மை இந்தியா’ திட்டத்துக்காக கோவையில் துடைப்பத்துடன் கவர்னர் குப்பைகளை அள்ளி தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.

198 total views, 4 views today