திரைப்பட பிரச்சனை விவகாரங்களில் நடிகர் விஜய்க்கு தமிழக அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், சர்க்கார் திரைப்படங்களின் பிரச்னைகளில் தமிழக அரசு ஏற்கெனவே உதவி செய்ததாக தெரிவித்தார்.

இதேபோல், பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் தொடர்பாக திரைப்பட விநியோகஸ்தர்கள், படத்தின் தயாரிப்பாளர்கள் கேட்டுகொண்டதின் பேரில் முதலமைச்சர் அனுமதியோடு சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கப்பட்டது என்றும், மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்தால், நிபந்தனையின் பேரில் அப்படங்களின் சிறப்பு காட்சிகளுக்கும் அனுமதியளிக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ குறிப்பிட்டார்.

 347 total views