திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வட்டாரம் வேளாண் விரிவாக்க மையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பல்வேறு வேளாண் நலத்திட்ட செயல்விளக்கம் உபகரணங்கள் கருவிகள் ரூபாய் 4ஆயிரம் விலைக்கொண்ட பொருட்கள் 20 ஆயிரம் மதிப்பீட்டில் தகுதி உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக திருவாலங்காடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திரு V.எபிநேசன் அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கினார்.

இதில் சூரிய மின் விளக்குபொறி,மண் புழு உரம் தயாரிக்கும் தார் பாய்,எலி ஒழிப்பு மேலாண்மை ஆகிய உபகரண கருவிகளை நேரடியாக வழங்கினார். இதில் வேளாண் அலுவலர் M.எழிலரசி,வட்டார தொழிநுட்ப்ப மேலாளர் A.அமிர்தலஷ்மி,உதவி தொழிநுட்ப மேலாளர் M.R.சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.இத்தகைய பயனுள்ள உபகரணங்கள் மானியத்தில் இலவசமாக வழங்கிய வட்டார வேளாண்மை அலுவலர் எபிநேசர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்

 558 total views