திருவாடானை
நான்கு முக்கு சந்திப்பு சாலையில் அரசு மற்றும் தனியார் பேரூந்துகளால் அடிக்கடி போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது
திருவாடானை நான்கு முக்கு சந்திப்பு சாலையில் அரசுப் பேரூந்துகளையும், தனியார் பேரூந்துகளையும் முறையற்ற வகையில் நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை
திருவாடானை நான்கு முக்கு சந்திப்பு சாலையில் அரசுப் பேரூந்துகளையும், தனியார் பேரூந்துகளையும் முறையற்ற வகையில் நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் காலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள் சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை அவசரமாக போக வேண்டியவர்களும் போக முடிவதில்லை. மேலும் அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ்களும் செல்லமுடியால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
இது குறித்து சமூக ஆர்வளர்கள் தெரிவிக்கையில் திருவாடானையில் இருந்து தொண்டி, திருவெற்றியூர், செல்லுமு் பேரூந்துகளையும், திருவாடானை பேரூந்து நிலையத்திற்கு வரும் பேரூந்துகளையும், திருவாடானையில் இருந்து ஓரியூர், மங்களக்குடி மார்க்கமாக செல்லும் பேரூந்துகளை சற்று முன் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கினாலே இதை சரிசெய்யலாம் என கோரிக்கை வைத்தார்கள். இது குறித்து காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவும் சமூக ஆர்வளர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

 613 total views