திருவள்ளுரில் சிகரெட் வாங்கி தர மறுத்த இளைஞரை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளியை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

திருவள்ளூர் பெரியகுப்பம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ஷியாம் என்கிற சாமுவேல்.
இவர் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தபோது லால் பகதூர் சாஸ்திரி தெருவில் நின்று குடிபோதையில் நின்று கொண்டிருந்த பொன்ராஜ் என்பவர்
இவர்களை அழைத்து சிகரெட் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.அதற்கு ஷியாம் மறுத்துள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதும் ஷியாம் அங்கிருந்து நடக்கமுயன்றபோது அவரை வழி மறித்த பொன்ராஜ் தனது காரில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஷியாமின் மார்பில் குத்தி விட்டு அங்கிருந்து காரில் தப்பிசென்றுள்ளார்.சம்பவ இடத்திலேயே இளைஞர் ஷியாம் உயிர் இழந்துள்ளார்.தகவல் அறிந்ததும் ஷியாமின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பொன்ராஜின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.அங்கு பொன்ராஜ் இல்லாததால் ஆத்திரமடைந்த அவர்கள் பொன்ராஜின் காருக்கு தீவைத்து கொளுத்தியுள்ளனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தகவல் அறிந்த திருவள்ளூர் நகர காவல்துறை பிரேதத்தை கைப்பற்றி திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுளனர்.பொன்ராஜின் வீட்டருகே அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.கொலை சம்ப்வம் குறித்து விசாரணை செய்து பொன்ராஜை தேடிவருகின்றனர்.

402 total views, 3 views today