திருவண்ணாமலை மாவட்டம் மங்கலத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

மங்கலத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு புதன்கிழமை ஊர்வலம் நடைப்பெற்றது.

திருவண்ணாமலை அடுத்த மங்கலத்தில் தேசிய டெங்கு தினமான புதன்கிழமை பொதுமக்களிடையே வட்டார மருத்துவ அலுவலர் பி. ராஜா தலைமையில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர் .

இதில் அனைத்து துப்புரவு பணியாளர்கள், சுகாதார நலகல்வி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் க. ஆனந்தன், சு. குமாரதேவன் ஆகியோர் கலந்துக்கொண்டு மங்கலம் சுற்றுவட்டார பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன் ஏற்பாடு சுகாதாரத்தை பேணி காத்தல் போன்ற கருத்துக்களை விளக்கி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

192 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close