செங்கத்தில் பரபரப்பு செங்கம் அடுத்த காயம்பட்டு கிராமத்தில். வசித்து வரும் அமானுல்லா விவசாயி மற்றும் பீடி சுத்தும் தொழில் செய்து வருபவர் இவர் நேற்று வெளியூர் சென்றுள்ளார் இவர் இல்லாத நேரத்தில் இவரது மனைவி ஷாஜிதா (52) இவரது இளைய மகள்.ரிசுனா (8) ஆகிய இருவரையும்.நேற்று இரவு யாரோ மர்ம நபர்கள் இவர்கள் வீடு புகுந்து தாக்கி உள்ளனர் இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் பேச்சு மூச்சு இல்லாமல் வீட்டின் உள்ளே இருந்துள்ளனர்.பக்கத்து வீட்டுக்காரர் பழனி என்பவர் இன்று அதிகாலை 6 மணியளவில் வீட்டின் அருகில் சிதறிகிடந்த போட்டோவை எடுத்து கொண்டு கதவை தட்டியுள்ளார் வீட்டின் உள்ளே இருந்து முனகல் சத்தம் வருவதை கேட்டு அக்கம் பக்கம் உள்ளவரை உதவிக்கு கூப்பிட்டு அடிபட்ட அவர்கள் இருவரையும் செங்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் தகவல் அறிந்து உடனே வந்த செங்கம் காவல் துறையினர் உடனடியாக தீவிர விசாரணையில் வீட்டில் உள்ள சில பொருட்களும் குழந்தையின் கால் செயினையும் திருடிச் சென்று இவர்களை கொலவெறியுடன் தாக்கி உள்ளனர். என தெரிவித்துள்ளனர் திருவண்ணாமலை எ.டி.எஸ்.பி செங்கம் டிஎஸ்.பி.ஆகியோர் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர்

 540 total views,  2 views today