திருவண்ணாமலை மாவட்டத்தில் தனிநபர் கழிப்பறை மறு கணக்கெடுப்பு பயிற்சி

தனிநபர் கழிப்பறை மறு கணக்கெடுப்பு பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் மங்கலம் மண்டல 9 ஊராட்சிகளிலும் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை மறு கணக்கெடுப்பு குறித்த பயிற்சி முகாம் மங்கலம் மண்டல ஊராட்சியில் செவ்வாய் கிழமை நடைப்பெற்றது.

மங்கலம் மண்டல உட்பட்ட மங்கலம், எரும்பூண்டி, கொத்தந்தவாடி, ஆர்பாக்கம், கருமாரப்பட்டி, நூக்காம்பாடி, பாலனந்தல், பூதமங்கலம், வேடந்தவாடி, 9 ஊராட்சியில் இந்த முகாம் மங்கலத்தில் நடைபெற்றது இதில். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சு. இராயர் தலைமையில் நடைப்பெற்றது.
<img src="https://media7webtv.in/wp-content/uploads/2018/05/IMG-20180515-WA0027-300×225.jpg" alt="" width="300" height="225" class="alignnone size-medium wp-image-42853" /
பயிற்சியை தொடங்கி வைத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சு. இராயர் பேசியதாவது தூய்மை பாரதத் திட்டத்தின் கீழ் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுகாதாரம் மேம்பாடு அடைந்திட தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதா என்பதையும் விடுபட்ட வீடுகளை கணக்கெடுக்க வேண்டும் .விரைவில் கணக்கெடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

இக் கூட்டத்தில் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள மங்கலம் மண்டல ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி அளவிளான கணக்கெடுப்பாளர்கள், வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள், சமுதாய வளப்பயிற்றுனர். ஆகியோர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

159 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close