திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ – ஜியோ ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ – ஜியோ ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ – ஜியோ சார்பில் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமை தாங்கினார். அப்போது புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் ஊராட்சி செயலாளர்கள் ஊர்ப்புற நூலகங்கள், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பூதியம், கணினி ஆசிரியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

102 total views, 6 views today

Be the first to comment

Leave a Reply