திருவண்ணாமலையில் திருநங்கைகளுக்குள் இடையே மோதல் அரிவாள் உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களில் தாக்குதல் 4 படுகாயம்

திருவண்ணாமலையில் திருநங்கைகளுக்குள் இடையே மோதல் அரிவாள் உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களில் தாக்குதல் 4 படுகாயம்

திருவண்ணாமலையில் திருநங்கைகளுக்கு இடையே செவ்வாய் கிழமை மோதல் ஏற்பட்டது மோதலில் அரிவாள், உருட்டுக்கட்டையால் தாக்கியதால் 4 பேர் படுகாயம் அடைந்த திருநங்கைகள் திருவண்ணாமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன.

32 மாவட்ட திருநங்கைகள் காவல் நிலையத்தை முற்றுகை
திருவண்ணாமலையில் உள்ள எழில் நகர் பகுதியில் வசிக்கும் அன்பு [எ] அன்பரசி திருநங்கை அடியாட்களை வைத்துகொண்டு கடை வசூல்.பேருந்து நிலையம் இரயில் உள்ளிட்ட இடங்களில் கட்டாய வசூலில் இடுபடுகிறார் என்ற குற்றசாட்டு திருவண்ணாமலை மாவட்ட திருநங்கைகளுக்குள் இருந்து வந்தது இதை மற்ற திருநங்கைகள் அன்பு[எ] அன்பரசி திருநங்கையை கண்டித்துள்ளனர் அப்படி கண்டித்தும் அன்பு என்ற அன்புபரசி திருநங்கை தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் தமிழகத்தில் 32 மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒன்று சேர்ந்து எழில் நகரில் உள்ள திருநங்கையை தட்டி கேட்டுள்ளனர்.

இதனால் இரு தர்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் அன்பரசியின் ஆட்கள் அருவாள் உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களில் விழுப்புரம். வேலூர். திருநெல்வேலி. மாவட்டங்களை சேர்ந்த திருநங்கைகளை கடுமையாக தாக்கியுள்ளனர் இதில் படுகாயம்அடைந்த நான்கு திருநங்கைகளும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் அன்பு[எ] அன்பரசி திருநங்கை மீது திருவண்ணாமலை கிராமிய காவல்நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் புகார் அளித்து காவல் நிலைத்தை முற்றுகையிட்டனர்.

96 total views, 6 views today

Top

Registration

Forgotten Password?

Close