*திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்…!!!*

*திருமுருகன் காந்தி, இளமாறன், அருண் உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.*

*இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் ஈழத் தமிழர்கள் பலர் இலங்கை ராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர்.*

*குண்டுகளை பயன்படுத்தக் கூடாது என்ற விதியையும் மீறி தமிழர்கள் அதிகம் வசித்த பகுதிகளான யாழ்ப்பாணம், திரிகோணமலை, மன்னார், வன்னி மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் குண்டுகளை வீசியது இலங்கை ராணுவம்.*

*இந்த இனப்படுகொலையை நினைவு கூறும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படுவது உண்டு.*

*ஆனால், எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்ற பிறகு நினைவேந்தல் நிகழ்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.*

*தடையையும் மீறி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த மே 17 இயக்கத்தினர் கடந்த 17 ஆம் தேதி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அப்போது காவல்துறைக்கும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.*

*இதனைத் தொடர்ந்து பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்  திருமுருகன் காந்தி, இளமாறன், டைசன், அனுன்குமார் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.* 

*மேலும் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கு தமிழகத்தின் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.*

*இந்த நிலையில், திருமுருகன் காந்தி, இளமாறன், அருண் உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டது.*

 296 total views