திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன் கோவையில் பேட்டி !

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன் கோவையில் பேட்டி !

காவிரியில் இருந்து தண்ணீர் பெற்றுத்தர தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்ற எம்பிக்கள் முயற்சிப்பார்கள் என்ற தமிழக முதலமைச்சரின் பேச்சு விஷமத்தனமானது என திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன் விமர்சித்துள்ளார்.

கோவை ஜீவா இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறிய அவர் ஆட்சியில் இருப்பதோடு, மத்திய பாஜக அரசுடன் இணக்கமாக உள்ள அதிமுக, மேகதாட்டூவில் அணை கட்டுவோம் என்ற கர்னாடக அரசின் அறிவிப்பை எதிர்த்து போராடமல் தவிர்த்துவிட்டு இவ்வாறு முதலமைச்சர் பேசுவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் 3 பேர் பலியாகியுள்ளதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் எனக்கூறிய அவர் இதுவரை நடந்த நீட் தேர்வுகளில் 20 ஆயிரம் எஸ்.சி, எஸ்.டி பிரிவினரும், 60 ஆயிரம் பொதுப்பிரிவினரும், 7 லட்சம் முற்பட்ட வகுப்பினரும் வெற்றி பெற்றுள்ளதாக வரும் தகவல்கள் ஆயிரம் ஆண்டுகளாக கற்பதையும் கற்பிப்பதையும் தொழிலாக கொண்ட பிராமணர்களுடன் கல்வியில் போட்டிக்கு வரக்கூடாது  என்பதற்காகவே வர்ணாசிரம  நோக்கத்துடன் நீட் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

163 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close