கண்காட்சியின் மூலம்திருப்பூர் பின்னலாடை துறையில் 250 கோடி ரூபாய்வரையிலான வர்த்தகம் அதிகரிக்கும் திருப்பூர்ஏற்றுமதியாளர் சங்க முன்னாள் தலைவர் பேட்டி.

திருப்பூரில் 41 வது குளிர்கால தேசிய பின்னலாடை கண்காட்சி அவினாசி சாலையில் உள்ள ஐ.கே.எப்.வளாகத்தில் துவங்கியது.கண்காட்சியை திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ரிப்பன் வெட்டியும் அப்பேரல் எக்ஸ்போர்ட் கவுன்சிலின் முன்னாள் தலைவர் உதானி குத்துவிளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தனர்.இந்த கண்காட்சியில் காட்டன் அல்லாத பாலியஸ்டர்,வகை ஆடைகள் மற்றும் காட்டன் லெனின் காட்டன் ஆடைகள் அடங்கிய 49 கம்பெனிகள் அரங்குகளை அமைத்துள்ளனர்.மேலும் இந்த கண்காட்சியை துவக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல் கூறுகையில் இந்த கண்காட்சியை காண வெளிநாடுகளில் இருந்து இருந்து 100  பையர்ஸ்,40 க்கும் மேற்ப்பட்ட அயல் நாட்டு இறக்குமதியாளர்கள் வருவார்கள் எனவும் இந்த கண்காட்சி மூலம் திருப்பூர் பின்னலாடை துறை வளர்ச்சி பெரும் என்றும் 250 கோடி வரையிலான வர்த்தகம் அதிகரிக்கும் என்றும் கூறினார்.இந்த கண்காட்சி நாளையும்,நாளை மறுநாள் என மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

 510 total views