.

திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்
சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொது
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – மாவட்ட அளவில் கலை நிகழ்ச்சிகள்
மற்றும் தெருமுனை நாடகங்கள் அடங்கிய பிரச்சார வாகனத்தினை திருப்பூர் மாவட்ட
ஆட்சியர் திருமதி.ச.ஜெயந்தி அவர்கள் இன்று கொடியசைத்து
தொடங்கி வைத்தார்கள்.

[KGVID]http://media7webtv.in/wp-content/uploads/2017/01/திருப்பூர்-1280×720-3.78Mbps-2017-01-30-14-50-00.mp4[/KGVID]

தமிழக அரசு மாற்றுத்திறன் உடையர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கனை
அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள்
நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களை பொது மக்கள்
அறிந்திடும் வகையில் கலை நிகழ்வுகள் தெரு முனை நாடகங்கள் மற்றும் துண்டு
பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சார வாகனத்தினை மாவட்ட
ஆட்சிரகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இப்பிரச்சார வாகனமானது இன்று (30.01.2017) மற்றும் நாளை (31.01.2017) ஆகிய
இரண்டு நாட்கள் மாவட்டத்தில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாகன
விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில்
திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு பராமரிப்பு குழந்தைகள் உரிமைகள்
குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரச்சனைகளை கையரளுதல் குறித்து பொதுமக்கள் அறிந்திடும் வகையில் மாவட்ட ஆச்சியர் தொடங்கி வைத்தார்.

 697 total views