திருப்பூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் நடக்கும் பாலம் வேலைகள் காரணமாக காமராஜ் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

பெருமாள் கோவில் பின்புறம் சாலையை குறுக்காக தடுத்து தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

எனவே பழைய பேருந்து நிலையம் வழியாக வாகனங்கள் செல்ல முடியாது. முன்கூட்டியே மாற்று பாதையில் திரும்பி சென்று கொள்ளவேண்டும்.

உதாரணமாக குமரன் சாலையில் இருந்து யுனிவர்சல் தியேட்டர் சாலை வழியாக ஸ்ரீ சக்தி தியேட்டர் , வளம் சாலையில் சென்று காங்கேயம் சாலை வழியாக செல்ல வேண்டும்.

தெற்கே இருந்து வடக்கே அவினாசி சாலை பக்கம் வரும் வாகனங்கள் சந்தைபேட்டை அல்லது தட்டாந்தோட்டம் வழியாக ABT ரோடு, மங்கலம்ரோடு, நடராஜா தியேட்டர் வழியாக செல்லலாம்.

ஆனால் ABT ரோடு இருவழி போக்குவரத்துக்கு ஏற்ற பாதையாக இல்லை என்பதுதான் சிக்கலே. அதன் வழியாக தெற்க்கே செல்ல அனுமதித்தால் பயங்கர போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.

மங்கலம்சாலை, அவினாசி சாலை பக்கம் இருந்து வரும் பேருந்துகள் மாநகராட்சி அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன.

ஈரோடு, சேலம் வழியாக செல்லும் வாகனங்கள் பெருமாள் கோவில் அருகே நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே கார், இரண்டு சக்கர வாகனங்கள் அனைத்தும் முடிந்தவரை பழைய பேருந்து நிலைய பகுதி பக்கமே வராமல் வேறு மாற்று வழிகளில் சுற்றி செல்வது நல்லது.

 465 total views,  1 views today