திருப்பூர் தாராபுரம் ரோடு புதூர் பிரிவு
பஸ் ஸ்டாப் அருகில் மதுபானக் கூட உரிமையாளர் ஜீவானந்தம் கனேசன் என்பவரை
இடைத்தரகராக வைத்து
நடத்தி வரும் சட்டவிரோத மது விற்பனையைத் தடை செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதி பயனிகள் சார்பில் முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு அனுப்ப உள்ளதாகவும் திருப்பூர் நகரில் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த மதுக் கடைகள் மூடப்பட்ட நிலையில் அதனுள் இயங்கி வந்த மதுக் கூடங்கள் தற்போதும் செயல்பட்டு வருகிறது. இங்கு சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது.
குறிப்பாக திருப்பூர் புதூர் பிரிவு தாராபுரம் சாலையில் உள்ள மதுக் கூடங்களில் தொடர்ந்து மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

ஆகவே, குற்ற செயலை கலையெடுக்கும் கமிஷ்னர் நாகராஜன் அவர்கள் இதைத் தடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மயில்மனி
திருப்பூர் நிருபர்.

 910 total views,  1 views today