திருப்பத்தூரில் இலவச இருதய மருத்துவ முகாம்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் ஒசூரில் 3 ஆண்டுகளாக இயங்கி வரும் காவேரி மருத்துவமனையின் சார்பாக முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு இருதய சிகிச்சை முகாம் நடைபெற்றது

இதில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் இருதய சிறப்பு மருத்துவர் பிரசன்னா இருதய பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார். நோயாளிகளுக்கு ஈசிஜி, எக்கோ, போன்ற அதிநவீன பரிசோதனை 150கும் மேற்பட்ட நோயாளிக்கு இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. இதுமட்டுமின்றி மருத்துவர் மஞ்சுநாதன் மற்றும் அபிதா பொது மருத்துவ பரிசோதனைகளான ரத்த அழுத்தம் மற்றும் சக்கரை, நாடித் துடிப்பின் அளவு ரத்தப் பரிசோதனை என இலவசமாக பல பரிசோதனைகளை நோயாளிகளுக்கு வழங்கினார். சிறிய பிரச்சினை உள்ள நோயாளிகளுக்கு இலவசமாக மாத்திரைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் செய்தி
ர. நித்தியானந்தன்

162 total views, 3 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close