திருபுவனத்தில் ரவுடி வெட்டிக்கொலை

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மேலதூண்டில் விநாயகம் பேட்டை, சேர்ந்த வடிவேல் மகன் இராமலிங்கம் வயது 40 இவர் திருபுவனம் கடைதெருவில் பாத்திரங்கள் சாமியானா வாடகைக்கு பொருள்கள் விடும் தொழில் செய்து வருகிறார் மேலும்
இவர் மீது திருவிடைமருதூர் காவல் நிலையத்தில்
7 வழக்குகள்
நிலுவையில் உள்ளது. இந்நிலையில் (5-2-2019)
நேற்று இரவு சுமார் 11 : 30 மணி அளவில் திருபுவனம் வடக்கு புது முஸ்லிம் தெரு வழியாக வாகனத்தில் செல்லும் போது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் விரைந்து வந்த திருவிடைமருதூர் காவல்துறையினர் இருக்கைகளிலும் பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய ராமலிங்கத்தை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமாக இருந்ததால். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுமார் 3 மணியளவில் ராமலிங்கம் உயிரிழந்துவிட்டார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர் மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக திருபுவனம் பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மீடியா 7 செய்திகளுக்காக செய்தியாளர் யாசின்

2,432 total views, 6 views today