திருத்தி அமைக்கப்பட்ட சங்கர் சிமெண்ட் டி.என்.பி.எல். தொடரின் பிளே ஆஃப் சுற்று

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆகஸ்ட் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த 2018 சங்கர் சிமெண்ட் டிஎன்பிஎல் தொடரின் தகுதிச் சுற்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு அவை நடைபெறும் நாட்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஆகஸ்ட் 9ம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 3.15 மணி அளவில் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் புள்ளி பட்டியிலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கும், சீசெம் மதுரை பேந்தர்ஸ் அணிக்கும் இடையே முதல் தகுதிச் சுற்று போட்டி தொடங்க உள்ளது. அதனை அடுத்து மாலை 7.15 மணி அளவில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில், லைகா கோவை கிங்ஸ் அணி, ஐட்ரீம் காரைக்குடி காளை அணியை எதிர்கொள்கிறது.

முதல் தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணி ஆகஸ்ட் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். இந்நிலையில், முதல் தகுதிச் சுற்று போட்டியில் தோல்வியுறும் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும் இரண்டாவது தகுதிச் சுற்று போட்டி, ஆகஸ்ட் 10 வெள்ளிக்கிழமை அன்று திண்டுக்கல் அடுத்த நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

280 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close