திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் சேவையில், இன்று (11.05.18) வெள்ளிக்கிழமை முதல் மே 31.05.18-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே மதுரைக் கோட்டம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே மதுரைக் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பாலக்காடு – திருச்செந்தூர் பயணிகள் ரயில் (வண்டி எண்: 56769) இன்று (மே 11 -ம் தேதி) முதல் மே-31-ம் தேதி வரை திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், கோவில்பட்டி – நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் (வண்டி எண்: 56770) இன்று (மே 11 -ம் தேதி) முதல் மே 31 -ம் தேதி வரை திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நெல்லை – கோவில்பட்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காடு – திருச்செந்தூர் பயணிகள் ரயில் (வண்டி எண்: 56769) வரும் மே 12-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மதுரை – நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் (வண்டி எண்: 56770) மே 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை புதன் மற்றும் சனிக்கிழமைகளில், நெல்லை – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மதுரையில் இருந்து மாலை 4.05 மணிக்குப் புறப்படுவதற்கு பதிலாக, மாலை 6.30 மணிக்கு 145 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும். இதே போல, ராமேஸ்வரம் – திருச்சி பயணிகள் ரயில் (வண்டி எண்: 56830) இன்று (மே-11ம் தேதி) முதல் 30 -ம் தேதி வரை (ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக), ராமேஸ்வரத்தில் இருந்து பிற்பகல் 1.55 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக பிற்பகல் 3 மணிக்கு, 65 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர் பாசில்

 564 total views