திருச்சி விமான நிலையத்தில் 78 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் பறிமுதல் 2 பெண்கள் உட்பட மூவரிடம் விசாரணை

திருச்சி நவ 03

திருச்சி விமான நிலையத்தில் 78 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் பறிமுதல் 2 பெண்கள் உட்பட மூவரிடம் விசாரணை

திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது திருச்சியைச் சேர்ந்த ஜெசிமா, பர்வீன்பானு, அசன் முகமது ஆகியோர் தங்களது உள்ளாடைகளில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூபாய் 78,24,964 மதிப்புள்ள 2,023 கிராம் எடையுள்ள தங்ககட்டி மற்றும் தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்தனர். மேலும் மூவரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

361 total views, 3 views today