திருச்சி ஜூன் 10

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த மலிண்டோ விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது சென்னையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் 259 கிராம் எடை கொண்ட தங்கத்தை தனது கைப்பையில் மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது.
அதேப்போன்று
மலேசியாவில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த மலேசியாவைச் சேர்ந்த சரஸ்வதி வீரப்பன் என்பவர் 240 கிராம் எடை கொண்ட 8 வளையல்களை தனது கைகளில் மறைத்து அணிந்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து தங்க வளையல் மற்றும் தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
கடத்தப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 500 கிராம் ஆகும்.மதிப்பு ரூபாய் 17 லட்சம் ஆகும்.
கமிஷனுக்கு ஆசைப்பட்டு மலேசியாவில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த இருவரும் தற்போது விமான நிலைய அதிகாரிகளின் தீவிர விசாரணையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Trichy jk

531 total views, 3 views today