திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மான்போர்ட் கல்வி நிறுவனமும் காவல்துறையும் இணைந்து தனியார் அரங்கில் போக்குவரத்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இக் கலை நிகழ்ச்சியில் வில்லுபாட்டு, போக்குவரத்து விழிப்புணர்வு கொண்ட நடனங்கள் மற்றும் மேடை நாடகம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக நீதி அரசர் தர்மபிரபு, மணப்பாறை அரசு மருத்துவமனை பொறுப்பு மருத்துவர் கார்த்திகேயன், மணப்பாறை காவல் துனை கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி, மணப்பாறை மோட்டார் வாகன ஆய்வாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பற்றிய சிறப்புரையாற்றினர்கள்.

நிகழ்ச்சியின் முடிவில் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி போக்குவரத்து விழிப்புணர்வு பற்றிய விளக்கங்களை கூறினார்.

மணவை அப்துல்லா
மத்திய மண்டல பொறுப்பாளர்

 1,029 total views