திருச்சி பாரத மிகு மின் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான குடியிருப்பு பகுதியில் ஆர்எஸ்கே மேல்நிலைப்பள்ளி உள்ளது. 50 ஆண்டு கால பழமை வாய்ந்த இந்த பள்ளியில் கடந்த 1987ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. பேஸ் புக் வாட்ஸ் அப் அலைபேசி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுää அழைப்பு விடுக்கப்பட்டு இந்த கூட்டமானது நடைபெற்றது. திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தின் அருகில் உள்ள எஸ்ஆர்எம் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பு கூட்டத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்களும் வந்திருந்தனர். ஒருவரை ஒருவர் கண்ட உடன் மிகவும் மகிழ்ந்து கட்டியணைத்துக் கொண்டனர். மேலும் இந்த கூட்டத்திற்கு 1987 கல்வி போதித்த ஆசிரியர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களை கூட்டத்திற்கு அழைத்து வந்த போது அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி உற்சாகத்துடன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன் பின்னர் 1987ஆம் ஆண்டு பள்ளி தோழர்களாக இருந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை திரையிட்டு காட்டப்பட்டது. இன்றைய கூட்டத்திற்கு பிறகு நாளை அனைத்து முன்னாள் மாணவர்களும் ஆர்எஸ்கே பள்ளிக்கு சென்று பார்வையிடுகின்றனர். அங்கு முன்னாள் மாணவர்கள் சேர்ந்து நடத்தி வரும் பயிர் தொண்டு நிறுவனத்திற்கு நிதி வழங்கப்பட உள்ளது. அதன் பின்னர் நலிவடைந்த பள்ளிகளுக்கும் நிதி வழங்கப்படும்.

திருச்சி மாவட்ட செய்தியாளர் பிரபாகரன்

731 total views, 2 views today