திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள நடுகாட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் ரெக்டோ ஆரோக்கியராஜ்- கலாராணி தம்பதியினர் .
இவர்களது 2வயது மகன் சுஜிர்த் வில்சன். நேற்று மாலை 5மணியளவில் வீட்டின் அருகே வழக்கம் போல் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது
சுர்ஜித் வில்சன் எதிர்பாராத விதமாக அங்கு இருந்த கைவிடப்பட்ட 30அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்கும் தவறி விழுந்தான். குழந்தையின் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது குழந்தை 20 அடி ஆழத்தில் இருப்பது தெரிய வந்தது. அதர்ச்சியடைந்த குடும்பத்தினர்
இது குறித்து தகவல் மணப்பாறை தீயணைப்பு படையினக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்பு படையினர் வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆழ்துளை கிணற்றுக்கு அருகே 4 பொக்லைன் இயந்திரங்கள் தொண்டு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பள்ளம் தோண்டும் போது ஏற்பட்ட அதிர்வு காரணமாக மண் குழந்தை மீது விழுவதால் பள்ளம் தோண்டும் பணி இடையில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து
மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் நாமக்கல் டேனியல்
குழந்தைகளை மீட்கும் ரோபோவை கண்டுபிடித்த இருவரும் மணப்பாறை வந்தனர். முதலில் ஒரு கையை கட்டி குழந்தையை மேலே இழுக்க
மற்றொரு கையையும் கட்டி மேலே இழுக்க முடிவு செய்து அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 4 மணி நேரமாக மீட்புக்குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் குழந்தைக்கு அதிக அளவில் வேர்பதால் கையில் கயிறு மாட்டுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் உடலில் ஏற்றப்பட்ட அதிக அளவு தண்ணீர் காரணமாக குழந்தை வழுக்கி மேலும் 20 அடியில் பள்ளத்திற்கு சென்று விட்டான். 15 அடி ஆழத்தில் விழுந்த குழந்தை சுர்ஜித் தற்போது 70 அடி பள்ளத்திற்கு சென்றிருப்பதால் மீட்பு பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பக்க வாட்டில் துளை ஏற்பட்படுத்தி மீட்கலாமா? என மீட்பு குழுவினர் யோசித்து வரும் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தற்போது மணப்பாறை வந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு குழுவினர் குழந்தையை மீட்க போராடி வருகின்றனர். இதனால் கிராம மக்கள் மிகுந்த கோகத்தில் அழ்ந்துள்ளனர்.

 555 total views