திருச்சி அருகே வாலிபர் ஒட ஒட விரட்டி வெட்டி கொலை – பதட்டம் போலீசார் குவிப்பு

திருச்சி மே 07

திருச்சி பொன்மலை அருகேயுள்ள மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் காதர் உசேன். இவரது மகன் ஜாவித் உசேன்(24). இவர் இன்று மாலை இறைச்சி வாங்க மேலகல்கண்டார்கோட்டை கடைவீதிக்கு வந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவரை விரட்டியது. இதையடுத்து ஜாவித் அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடினார். ஆனால் அந்த 3 பேரும் அவரை விடாமல் விரட்டினர். ஜாவித் அருகில் இருந்த ஆவின் பால் பூத்துக்குள் புகுந்தார். இருப்பினும் 3 பேரும் பால் பூத்துக்குள் சென்று அவரை சரமாரியாக வெட்டினர். இதில் ஜாவித் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த பொன்மலை போலீசார் அங்கு சென்று ஜாவித் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Trichy Jk

362 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close