திருச்சி அருகே இடி தாக்கி கர்ப்பிணி பெண் உள்பட இருவர் பலி .

திருச்சி ஜூன் 04

திருச்சி மாவட்டம், துறையூர் அய்யம்பாளையம், கவுண்டர் தெரு, பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் இவரது மகன்
குணா (17). இவர் பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரியில் சேர இருந்தவர். மகள்
முத்துலட்சுமி (21)
இவரை பெரம்பலுரில் கடந்த 1 வருடம் முன்பு பிரகாஷ் என்பவருக்கு திருமண செய்து கொடுத்தனர்.

தற்போது 7 மாத கர்ப்பிணியான அவர் வளைகாப்பிற்காக , பெரம்பலூரில் இருந்து பிறந்த வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில் இன்று மாலை தனது தம்பியுடன் ஆடு மேய்ப்பதற்காக வயல் காட்டிற்கு சென்றார். அப்போது இடியுடன் மழை பெய்தது. மழை அதிகமகவே அருகில் வயலில் இருந்த தகர கொட்டகையில் ஒதுங்கி நின்றனர். எதிர்பாராவிதமாக இடி கொட்டகையில் மேல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அக்காள், தம்பி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல்
துறையூர் போலீசார் இருவரது உடல்களைக் கைப்பற்றிய துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றன்.
Trichy Jk

118 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close