திருச்சி பிப் 4 திருச்சியில் தொல்லெழுத்துக்கள் பயிலரங்கம்.
தொல்லெழுத்துக்கள் பயிலரங்கம்.
திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் தொல்லெழுத்துக்கள் பயிலரங்கம் நடைபெற்றது காப்பாட்சியர் பெரியசாமி தலைமையுரையில் இன்றைய தலைமுறையினர் தொன்மையான தமிழ் பிராமி மற்றும் வட்டெழுத்துக்களை அறிந்திருந்தால் பல்வேறு இடங்களில் உள்ள வரலாற்றினை அறிய முடியும் என்றார்.
மாவட்ட சுற்றுலா அலுவலர் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பழனி தொல்லியலாளர் நாராயணமூர்த்தி தொல்லெழுத்துக்கள் பயிலரங்கில் பயிற்சி அளித்தார்.
எழுத்தானது ஒரு மொழியின் அடிப்படை கூறாகும்.
ஒலி வடிவத்திற்கு வரிவடிவம் கொடுப்பது எழுத்து ஆகும்.
தமிழி அல்லது தமிழ் பிராமி என்பது தொன்மைக் காலத்தில் எழுதப் பயன்பட்ட எழுத்து வடிவமாகும்.
தமிழ்ப் பிராமி எழுத்து வடிவங்கள் குகைப் படுக்கைகளில் காணப்படுகின்றன. கி.மு.5 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் பிராமி கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கி.பி. 3ஆம் நூற்றாண்டில் எழுத்து வடிவமாக உள்ளது.
3 முதல் 7ம் நூற்றாண்டில் வட்டெழுத்துக்களாகவும், 8 முதல் 13ம் நூற்றாண்டில் வடிவமாற்றம் கண்டும், 13 முதல் 17ம் நூற்றாண்டில் தமிழ் எழுத்து வரிவடிவமாகவும் ஆனது. தொன்மை மொழியாக தமிழ், சீனம், ஹீப்ரு உள்ளது.
பல்வேறு மொழிகள் வழக்கொழிந்து விட்டாலும் உயிரோட்டமாக பேச்சு மொழியில் தமிழ் உள்ளது என்றார். மேலும் மொழி, தொல்லியல் வரலாறு, மானுடவியல் என ஒன்றுக்கொன்று பின்னி பிணைந்தவை ஆகும் என்றார்.
அருங்காட்சியகத்தில் உள்ள கல்வெட்டுகளில் உள்ள தமிழ் பிராமி எழுத்துக்களை படிப்பது குறித்து விளக்கம் அளித்தார்.
முன்னதாக அய்யாசாமி வரவேற்க யோகாசிரியர் விஜயகுமார் நன்றிக் கூறினார்

 490 total views